திண்டிவனம் தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ். 
தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கும் தலைவர் தேர்தலுக்கும் 10 நாட்கள் இடைவெளி ஏன்?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

செய்திப்பிரிவு

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட ரொட்டிக்கார தெருவில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் அமைந்துள்ள 19வது வார்டில் நேற்று பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சௌமியாவுடன் சென்று வாக்களித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியது:

இத்தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு பணப்பட்டு வாடாவை ஆண்ட, ஆளும் கட்சிகள் செய்து வருகின்றன. இது ஜனநாயக கேலிகூத்தாகும். இந்த அவல நிலையை மாற்ற வேண்டும். ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் பாமக உட்பட எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தி வேட்புமனுவை திரும்ப பெற வைத்தனர். பிரச்சாரம் செய்ய விடாமல் செய்தனர்.

பொது சின்னம் வேண்டும்

மக்களுக்கு பணத்தை கொடுத்த வர்கள் எவ்வித நல்லதும் செய்ய போவதில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் இனிவரும் காலங்களில் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னம் அளிக்காமல், சுயேச்சை சின்னம் அளிக்கப் படவேண்டும். பொது சின்னத்தில் போட்டியிட்டால் வாக்காளர்கள் நேர்மையானவர்களை தேர்வு செய்வார்கள். நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் தேர்தல் நேரடியாக நடைபெற வேண்டும்.

நகர்ப்புற தேர்தலுக்கும், தலைவர் தேர்தலுக்கும் 10 நாட்கள் இடைவெளி கொடுத்தது ஏன்?. பேரம் பேச வசதி செய்து கொடுத்துள்ளனர். இதனையும் மீறி பாமக மிகப்பெரிய வெற்றி பெறும். கடந்த கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு 3-ம் இடம்பிடித்துள்ளோம்.

தனித்துப் போட்டியிடுவோம்

இனிவரும் காலங்களில்பாமக தனித்துப் போட்டியிடும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். நீட் தேர்வை வைத்து இளைஞர்கள் மனதை மாற்றினார்கள். இந்தியாவில் இதுபோல எங்கும் நடைபெற வில்லை. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நிறைவேற்றுவார்கள் என்று முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். அப்போது மயிலம் எம்எல்ஏ சிவகுமார் உள்ளிட்ட பாமகவினர் உடனிருந்தனர்.

இத்தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு பணப்பட்டு வாடாவை ஆண்ட, ஆளும் கட்சிகள் செய்து வருகின்றன. இது ஜனநாயக கேலிகூத்தாகும்.

SCROLL FOR NEXT