சிவகங்கை மாவட்டம், தேவகோட் டையில் வாக்குச்சாவடி அருகே அதிமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்ட கைகலப்பில் காங்கிரஸ் வேட்பாளரின் மகன்கள் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
தேவகோட்டை நகராட்சி 11-வது வார்டில் அதிமுக சார்பில் சண்முகநாதன், காங்கிரஸ் சார்பில் பவுல் ஆரோக்கியசாமி, பாஜக சார்பில் சுரேஷ் உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த வார்டுக்கான வாக்குப் பதிவு ராம்நகர் ஜோசப் பள்ளி வாக்குச்சாவடியில் நடந்தது.
நேற்று காலை வாக்குச் சாவடிக்கு அருகே அதிமுக, காங்கிரஸார் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
அதிமுகவினர் பாட்டில், டியூப் லைட்டால் தாக்கியதில் காங்கிரஸ் வேட்பாளர் பவுல் ஆரோக்கியசாமியின் மகன்கள் பிரகாஷ் (28), ரெக்ஸ் ஆண்டோ (24) மற்றும் ஆதரவாளர் ஜேசுராஜன் (38) ஆகியோர் காயமடைந்தனர்.
மூவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.
இதுகுறித்து செந்தில்குமார் எஸ்பி தலைமையிலான போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கூறு கையில், ‘தோல்வி பயத்தால் எங்களை தாக்கினர்,’ என்றனர்.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘ வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை தட்டிக் கேட்ட போது எங்களை தாக்கினர்.' என்றனர்.