புதுக்கோட்டை அருகே பள்ளி வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற 16 குழந்தைகள் காயமடைந்ததாக தெரிய வந்துள்ளது.
புதுகோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானது. பள்ளி வாகனம் மீது லாரி மோதியதில், வாகனத்தில் பயணித்த பள்ளி குழந்தைகள் 16 பேர் காயமடைந்தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த பகுதிக்கு புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் மனோகரன் விரைந்தார்.