திருச்சி: "வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக திருச்சி மாவட்டத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அம்மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலையொட்டி திருச்சி மாநகராட்சி 60-வது வார்டுக்குட்பட்ட காஜாமலை சந்திரா மானிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இன்று வாக்களித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு உரிய சின்னங்களில் வாக்கு பதிவாவதை உறுதி செய்த பிறகே வாக்குப்பதிவை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, அதன்படியே மாவட்டத்தில் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்று வருகிறது.
வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக திருச்சி மாவட்டத்தில் 17 புகார்கள் வரப் பெற்று, அவற்றின் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.