திருவெண்ணெய்நல்லூரிலிருந்து திருக்கோவிலூர் நோக்கி செல்லும் வாகனங்களை பறக்கும்படையினர் சோதனை செய்கின்றனர். 
தமிழகம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பரிசு மழை: கண்டு கொள்ளாத பறக்கும் படையினர்

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத் தில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் பல வழிகளில் வழங் கப்படுகிறது. இதனை பறக்கும் படையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை இன்று(பிப்.19) மாலை வரை நடைபெறு கிறது.

ஆனால் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், வெள்ளி கொலுசுகள், மளிகைப்பொருட்கள் என பலவழிகளில் கொடுத்து வருகின்றனர். வாய்ப்புள்ள பகுதிகளில் வாக்காளர்களின் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை வாங்கி மொபைல் ஆப்ஸ் மூலம் பணம் அனுப்பி வருகின்றனர்.

ஆனால் இன்னமும் தேசிய நெடுஞ்சாலைகள், கிராம சாலைகளில் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் கட்சிக்கொடி கட்டாமல் வரும் வாகனங்களை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். அதேநேரம் கட்சிக்கொடி கட்டிக்கொண்டு (எந்த கட்சிக் கொடியாக இருந்தாலும்) கடக்கும் கார்களைநிறுத்தும்படி சைகைக்கூட காட்டுவதில்லை.

அதே நேரத்தில் எளியவர்களின் வாகனங்களை சோதனை செய்து, அவர்கள் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம், பொருட்களை கைப்பற்றியதாக அருகாமையில் உள்ள கருவூலங்களில் ஒப்படைக்கின்றனர்.

SCROLL FOR NEXT