இன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 11 வகை ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் பகுதி உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் இன்று (19-ம் தேதி) காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.
வாக்காளர்கள் பாதுகாப்பாக வந்து வாக்க ளித்துச் செல்ல தேவையான அனைத்து ஏற் பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. குறிப் பிட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் தவ றாமல் தங்கள் வாக்குகளை செலுத்தி தங்கள் பகுதிக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும்.
ஆதார் அட்டை, ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிம அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட தேர்தல் ஆணையம் அனு மதித்துள்ள 11 வகையான ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.