படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

மதுரை: வழிபாட்டுக்குப் பின் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்

செய்திப்பிரிவு

மதுரை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற வேண்டி, மதுரையில் தேர்தல் அலுவலர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்த பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைத்தனர்.

தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றவுள்ளது. இதனிடையே, வேட்பாளர்களின் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதனால் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவுக்கான எந்திரம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மதுரையில் இன்று வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி அலுவலக அறைக்கு முன்பு தோரணம் கட்டி, பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிகாரிகள் வாக்குப்பதிவு நல்ல முறையில் நடைபெற வேண்டி வழிபட்டனர். பின்னர் காவல் துறையினர் உதவியுடன் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களைப் பிரித்து அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT