கானாடுகாத்தான் பேரூராட்சி பழையூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பலகை. 
தமிழகம்

கானாடுகாத்தான் பேரூராட்சியில் பழையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் பழையூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 8-வது வார்டு ஆதிதிராவிடர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த வார்டில் ஒருவர் கூட ஆதிதிராவிடர் இல்லாததால் அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தனர். இருந்தபோதிலும் அருகேயுள்ள வார்டைச் சேர்ந்த ஒருவர் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரும் கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றார். இதனால் அந்த வார்டில் தேர்தல் நடக்கவில்லை. அதேபோல் கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட பழையூர் பகுதியில் ஏற்கனவே 1, 2 என இரண்டு வார்டுகள் இருந்தன.

ஆனால் அதிகாரிகள் சமீபத்தில் வார்டுகளை மறுவரையறை செய்தபோது 2-வது வார்டை 2-ஆக பிரித்து 3, 5-வது வார்டுகளில் சேர்த்தனர். இதையடுத்து பழையூர் பகுதி மக்கள் வார்டை ஏற்கெனவே இருந்தபடி சீரமைத்து தர வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

நடவடிக்கை இல்லாதநிலையில் நேற்று பழையூர் பகுதியைச் சேர்ந்த பழைய 2-வது வார்டு மக்கள் திடீரென தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT