தமிழகம்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அனுப்பிய கடிதத்தை தமிழக காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்டது. அதில், முகுல் வாஸ்னிக் கூறியுள்ளதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அறிவுரைப்படி நியமித்துள்ளோம். அந்தக்குழுவுக்கு காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தலைமை வகிப்பார். அந்தக்குழுவில், யு.பலராமன், மானிக் தாகூர், அ.கோபண்ணா, சி.ஆர்.கேசவன்,சோலையப்பன், கு.செல்வப்பெருந்தகை, சி.டி.மெய்யப்பன், எஸ்.எம்.ஹிதாயதுல்லா, எம்.ஜோதி, எம்.ஜான்சிராணி, எம்.எஸ்.திரவியம், சூரியமூர்த்தி, பெருமாள்சாமி, பேராசிரியை இந்திரா காந்தி, இமயா கக்கன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT