திண்டுக்கல் மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்ததால் சுயேச்சை வேட்பாளரை ஆதரிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் சில தினங்களுக்கு முன்பு 1-வது வார்டு அதிமுக வேட்பாளர் முத்துப்பாண்டியை ஆதரித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் முத்துப்பாண்டி நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர், அதே வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சர்க்கரைத்தாயை அதிமுகவில் இணைத்தனர். தற்போது வேட்பாளர் சர்க்கரைத்தாய்க்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.