கேரளாவில் கோயிலில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் களுக்கு தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக ஆளுநர் கே.ரோசய்யா
கேரள மாநிலத்தில் பரவூரில் உள்ள கோயிலில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்து குறித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். இவ்விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா
கேரள மாநிலம் பரவூரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மீட்பு நடவடிக்கையில் கேரள அரசுக்கு வேண்டிய உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள், மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ குழுவினரும் அனுப்பிவைக்கப்படுவார்கள்.
கருணாநிதி (திமுக தலைவர்)
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றேன். காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர் களுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின் (திமுக பொருளாளர்)
கேரளாவில் புட்டிங்கல் தேவி கோயில் திருவிழாவில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர் களுக்கு கேரள மாநில அரசு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அன்புமணி ராமதாஸ் (பாமக இளைஞர் அணி தலைவர்)
மகிழ்ச்சியாக நடந்திருக்க வேண்டிய கோயில் திருவிழா சிறிய அலட்சியத்தால் சோகமாக மாறியிருக்கிறது. இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்து வமனை நிர்வாகங்களுக்கு அரசு ஆணையிட வேண்டும். உயரிழந் தோரின் குடும்பங்களுக்கும், காயம டைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)
கேரளாவில் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பலர் பலியான செய்தி கேட்டு மனம் பதறியது. திருவிழாக்களில் மக்கள் குவியும் இடங்களுக்கு அருகில் சக்தி வாய்ந்த பட்டாசுகளை வெடிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்போதாவது அனைவரும் உணர வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்)
கேரளாவில் கோயில் திருவிழாவில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி யுள்ளது. கோயில் திருவிழாக்கள், அரசியல் கட்சி பொதுக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பட்டாசு வெடிக்க அரசு தடை விதிக்க வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்)
கேரளாவில் கோயில் விழாக்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடையுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்த வர்களின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இந்த விபத் துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி (எஸ்டிபிஐ மாநில தலைவர்)
கேரளாவில் கோயில் திருவிழாவில் நடந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
சீமான் (நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்)
மக்கள் அதிகளவு கூடுமிடங் களில் பட்டாசுகள் பயன்படுத்து வதில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். இனியாவது மக்கள் கூடுமிடங்களில் எச்சரிக்கையாக இருந்து விபத்துக்களை தடுக்க வேண்டும். இவ்விபத்தே கடைசி விபத்தாக இருக்க வேண்டும்.