ரசீது தரும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மின்து றையை பகுதி பகுதியாக தனியா ருக்கு தாரைவார்க்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
மின்துறையை தனியார் மயமாக்க ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பகுதி பகுதியாக தனியார் மயமாக்கும் முடிவுகளை மாநில அரசு ஜனநாயக விரோதமாக எடுத்துள்ளது. தற்போது ரசீது வழங்கும் பணியை மட்டும் தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. இதற்கு ஒரு நுகர்வோருக்கு ரூ.2 கட்டணம் நிர்ணயித்து தனியாரிடம் கொடுக்கப்படவும் உள்ளது. இதன்மூலம் தேவையின்றி மின்கட்டணத்தில் ரூ.2 நுகர்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மின் அளவீட்டை ஒருவரும், ரசீது வழங்குவதை ஒருவரும் என தனித்தனியாக செய்வதால் மக்களுக்கு கட்டண ரசீது வழங்குவதில் மேலும் காலதாமதம் ஏற்படும். மேலும், தனியார் மயத்தின் முதல் கட்டமாகவும் இந்தப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசு மின்துறை யின் ஒவ்வொரு பணியாக தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே உடனடியாக மின்துறை மின் அளவீட்டு கட்டண ரசீதை தனியார் மூலம் நுகர்வோருக்கு வழங்கிடும் பணியை மாநில அரசு கைவிட வேண்டும். ஆளும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு எந்தவகையில் மின்துறையை தனியார் மயமாக்க முயற்சித்தாலும் அதை திமுக தடுத்து நிறுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.