தமிழகம்

நெய்வேலி நகரிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு கிடையாது

ந.முருகவேல்

நெய்வேலியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. சுமார் 25 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நெய்வேலி நகரியத்தினுள் 4 சுரங்கங்கள், 4 அனல்மின் நிலையங்கள், சூரிய சக்தி மின் நிலையம் இது தவிர 17ஆயிரம் ஊழியர்களின் குடும்பங்களோடு சுமார் 80 ஆயிரம் பேர் வசிக் கின்றனர்.

இதனிடையே, கடந்த 2011-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தொகு திகள் மறு சீரமைப்பின் கீழ் நெய்வேலி சட்டப்பேரவை உரு வாக்கப்பட்டது.

இந்த நிலையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது நெய்வேலி நகரியத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களித்து வந்தாலும்,உள்ளாட்சித் தேர்தலில் நெய்வேலி நகரிய வாக்காளர்கள் வாக்களிப்பதில்லை.

தொழில் நிறுவனமான என்எல்சி நிறுவனத்திற்கு சொந் தமான இடத்தில் தான் அதன் ஊழியர்களுக்கு குடியிருப்பைக் கட்டிக் கொடுத்து, அந்நிறுவனமே, குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, வடிகால் வசதி, பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிட நகர நிர்வாகம் என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் மேற்க ண்டவற்றை செயல்படுத்தி வரு கிறது.

நெய்வேலி நகரியப் பகுதியில் வசிப்பவர்களுக்கு சொந்தமான குடியிருப்பு கிடையாது. அனைவருமே வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். எனவே இவர்கள் சொத்துவரி, குடிநீர் வரி, குப்பை வரி உள்ளிட்ட வரியினங்களும் செலுத்தவில்லை. அதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவசியமில்லாத உள்ளது.

இதுகுறித்து நெய்வேலி சட்டப்பேரவை திமுக உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கூறுகையில், நெய்வேலித் தொகுதியில் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் குறிப்பாக நெய்வேலி நகரியத்தில் மட்டும் 53 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதி மக்களின் தேவைகளை என்எல்சி நிர்வாகமே செய்து கொடுக்கிறது. அதேநேரத்தில் இப்பகுதி மக்களின் கொள்கை சார்ந்த விஷயங்களுக்கு, குறிப்பாக வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, போக்குவரத்து வசதி, சுற்றுப்புற கிராம மக்களுக்கு, இந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவேண்டிய திட்டங்கள் குறித்து சட்டப் பேரவையில் எடுத்துரைத்து செயல்படுத்தி வருகிறேன்” என் றார்.

இப்பகுதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையின் பணியாற்றும் பெண் ஊழியர் செல்வமணி கூறுகையில், “கடந்த 22 ஆண்டுகளாக நெய்வேலி நகரியத்தில் வசித்து வருகிறேன். நான் இங்கு வந்த நாள் முதல் இங்கு நகராட்சி அலுவலகத்தை பார்த்ததில்லை. மாறாக நகர நிர்வாகம் என்ற அமைப்பு தான் செயல்படுகிறது. ஒரு அதிகாரியின் கீழ் இயங்கும் அந்த அமைப்பின் மூலமே அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படுகிறது. இங்கு கவுன்சிலர், தலைவர், மேயர் என யாரும் கிடையாது” என்றார்.

இதுகுறித்து நெய்வேலி நகரிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “இது ஒரு திட்டப்பகுதி (Project Area) எனவே அந்தப் பகுதியில் உள்ளாட்சி அமைப்பு என்பது நிறுவனத்தையே சாரும். அந்த நிறுவனமே அனைத்து விதமான கட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்வதால், இங்கு மாநில அரசின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவசியம் ஏற்பட்டதில்லை” என்று தெரி வித்தனர்.

SCROLL FOR NEXT