புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 68 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இன்று (பிப். 15) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 1,971 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 39 பேர், காரைக்காலில் 16 பேர், ஏனாமில் 8 பேர், மாஹேவில் 5 பேர் என மொத்தம் 68 பேருக்கு (3.45 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65, 363 ஆக அதிகரித்துள்ளது. இதில் மருத்துவமனையில் 35 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 865 பேரும் என மொத்தமாக 900 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,959 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.18 சதமாக உள்ளது. புதிதாக 196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 504 (98.27 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15 லட்சத்து 57 ஆயிரத்து 738 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.