சென்னை: எல்ஐசி பங்கு விற்கும் முடிவை திரும்ப பெறுமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவு:
எல்ஐசி நிறுவனம் பல்லாண்டுகளாக பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவு செய்து, தனதுதிறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கியுள்ளது. அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5%ஐ விற்க மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார் மயத்தை நோக்கிய முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும்.
இம்முடிவு மக்களின் நலனையோ, எல்ஐசி நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டது இல்லை. முறையான யோசனையின்றி எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்று எல்ஐசியை காக்க வேண்டும்.