சிவகங்கை அருகே திருமண விழாவில் ஆதார் கார்டு காட்டியவர்களுக்கு மதுபாட்டில், சிக்கன் வழங்கியதோடு, திருமணமாகாதவர்களுக்கு 2 மது பாட்டில்களை இளைஞர்கள் இலவச மாக வழங்கினர்.
சிவகங்கை அருகே கீழகண்டனியில் நண்பரின் திருமண விழாவுக்கு வருவோருக்கு மதுபாட்டில், சிக்கன் வழங்கப்படும் என அறிவிப்பு செய்து, சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி இளைஞர்கள் சிலர் பிளக்ஸ் போர்டு வைத்தனர். மேலும் அதில் சில நிபந்தனைகளையும் குறிப்பிட்டி ருந்தனர். அதன்படி ஆதார் கார்டு கொண்டுவர வேண்டும். திருமணம் ஆனவர்களுக்கு ஒரு மதுபாட்டிலும், ஆகாதவர்களுக்கு 2 மதுபாட்டில்களும் தரப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று திருமண விழா வுக்கு சென்ற மது பிரியர்கள் ஆதார் அட்டையை காட்டி மதுபாட்டில், சிக்கன் வாங்கிச் சென்றனர். வித்தியாசமான இந்த அறிவிப்பால் பல்வேறு பகுதி களை சேர்ந்த ஏராளமானோர் திருமண விழாவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.