தமிழகம்

ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் மோசடி செய்பவர்களுக்கு சிறை தண்டனை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களை சிறைக்கு அனுப்புவோம் என சுயேச்சையாக களம் இறங்கி யுள்ள வேட்பாளர்களை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

பேரணாம்பட்டு நகராட்சி தேர்தலில் சுயேச்சைகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசும்போது, ‘‘ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் அவர்களின் எம்பி., எம்எல்ஏக்களை பார்த்து கோரிக்கைகள் வைத்து நிறைய திட்டங்களை நிறைவேற்றுவார்கள். இங்கு, போட்டியிடும் சுயேச்சை களுக்கு வாக்களித்தால் என்ன செய்வார்கள். இங்கு ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் பலர் பணம் வைத்துக்கொண்டு போட்டியிடு கிறார்கள். வரும் 22-ம் தேதிக்குப் பிறகு வரி செலுத்தாமல் ஏமாற்று பவர்களை மொத்தமாக பிடித்து 1 ரூபாய் ஏமாற்றி இருந்தாலும் தொரப்பாடிக்கு கொண்டு போய் விடுவோம்.

எத்தனையோ பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் பார்த்தவர்கள் திமுகவினர். எங்கள் கட்சி ஆட்சியில் இருப்பதால் இவர்கள் வென்றால், தண்ணீர் வேண்டும், குடிசை வேண்டும் என்று கேட்டால் நாங்கள் செய்து கொடுப்போம்.

நீங்கள் வந்தால் என்ன செய்யப் போகிறீர்கள். ஏன் ஊருக்கு நல்லது செய்வதைக்கூட கெடுக்கிறீர்கள். இவர்கள் எல்லாம் இடைஞ்சல் செய்பவர்கள்’’ என்றார்.

SCROLL FOR NEXT