தமிழகம்

கவுசல்யாவின் பெற்றோர் ஜாமீன் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

உடுமலை சங்கர் கொலை செய்யப் பட்டது தொடர்பாக, அவரது மனைவி கவுசல்யாவின் பெற்றோர் ஜாமீன் மனுக்களை திருப்பூர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான சங்கர், தன்னுடன் படித்த கவுசல்யா என்ற பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், உடுமலை பேருந்துநிலையம் அருகே கடந்த 13-ம் தேதி சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, உடுமலை போலீ ஸார் வழக்கு பதிவு செய்து கவுசல் யாவின் உறவினர்களை கைது செய் தனர். கவுசல்யாவின் தந்தை சின்னச் சாமி நிலக்கோட்டை நீதிமன்றத்திலும், தாயார் அன்னலட்சுமி தேனி நீதிமன்றத் திலும் சரணடைந்தனர். இவர்களை, போலீஸார் காவலில் எடுத்து விசாரித் தனர். இந்நிலையில், கடந்த 31-ம்தேதி திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன் றத்தில் இருவர் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை, முதன்மை மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கவுசல்யாவின் பெற்றோர் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT