புதுவையில் அரசு அறிவிப்புகள் நடைமுறைக்கு வராததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர்,முதல்வரை மீறி அதிகார சக்தியுள்ளதா என்று எதிர்க்கட்சித்தலைவர் சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை:
புதுவையில் அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள ஆளுநர் தமிழி சையும், முதல்வர் ரங்கசாமியும் ஒற்றுமையாக மாநில வளர்ச்சிக்கு செயல்படுவதாக கூறியுள்ளனர். ஆனால், பல திட்டங்கள் கிடப்பில் உள்ளன. புதுவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 398 பணி நிரந்தரம் செய்யப்பட்ட அங்கன் வாடி ஊழியர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்கள் கடந்த இரு வாரமாகதங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அங்கன்வாடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் 9,500 அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்காலிக ஊழியர்களுக்கு குறைந் தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படவில்லை. அனைத்து பகுதிகளிலும் ரேஷன்கடை திறக்கப்படவில்லை. தீபாவளி, பொங்கல் பொருட்கள் இன்னும் பல பகுதிகளுக்கு சென்று சேர வில்லை. பஞ்சாலைகள், சர்க்கரை ஆலை உள்ளிட்டவைகள் திறக்கப்படவில்லை. சுகாதாரத்துறை யில் மருந்து, மாத்திரைகள் பற்றாக் குறை உள்ளது. அரசு அறிவிப்புகள் நடைமுறைக்கு வராததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் ஆளுநர், முதல்வரை மீறிய அதிகார சக்தியுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.