வீராணம் ஏரி 
தமிழகம்

தண்ணீர் வரத்து இல்லாததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது

செய்திப்பிரிவு

வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் கீழணையில் இருந்து காவிரி தண்ணீர் வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு ஏரி நிரப்பப்பட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது. காவிரி தண்ணீர் கீழ ணைக்கு வருவது நிறுத்தப்பட்டது. கீழணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைப்பதும் நிறுத்தப்பட்டது.

ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னை குடிநீருக்கும், விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 63 கன அடியும், பாசனத்துக்கு விநாடிக்கு 61 கன அடியும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது ஏரியின் நீர் மட்டம் 44.40 அடி உள்ளது. இன்னும் சில நாட்களில் ஏரியின் நீர் மட்டம் மேலும் குறையும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT