விருதுநகர் நகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். 
தமிழகம்

பாஜக தனியாக போட்டியிடுவது ஏன்? - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

செய்திப்பிரிவு

அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில்தான் உள்ளன. பலத்தை பெருக்கவே இத்தேர்த லில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதா கிருஷ்ணன் கூறினார்.

விருதுநகர் நகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட் பாளர்களை ஆதரித்து, நேற்று வாக்கு சேகரித்த பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:

காமராஜர் தலைவராக இருந்த விருதுநகரில் லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகத்தை பாஜக வழங்கும். அதிமுக பாஜக கூட்டணி முறிந்து விடவில்லை. பலத்தை பெருக்கவே இந்த தேர்தலில் இரு கட்சியினரும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். காமராஜர் கொண்டு வந்த திட்டம்தான் பள்ளிகளில் சீருடை அணியும் திட்டம். ஒவ்வொரு பள்ளியும் தங்களுக்கான சீருடையை முடிவு செய்து கொள்ள முடியும். அதில் வரும் பிரச்சினைகளை பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். இதை அரசியலாக்குவது முறை யல்ல. மற்றவர்கள் தலையிடுவது தேவையற்றது. ஏதாவது பிரச் சினை என்றால்தான் மாநில அரசு தலையிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையில்...

மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட் பாளர்களை ஆதரித்து பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், மக்களை சாதி, மத ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை திமுக செய்து வருகிறது. இதனால் தான் தென் மாவட்டங்கள் வளர வில்லை என்றார்.

மாவட்ட தலைவர் டாக்டர் பி.சரவணன், அரசு தொடர்பு பிரிவு தலைவர் ராஜரத்தினம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT