270 அமாவாசை வந்தாலும் பழனிசாமி இனி முதல்வராக முடியாது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. பிரச்சாரம் செய்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பழனிசாமி சரித்திர விபத்தால் முதல்வரானவர். ஜோசியர் பழனிசாமியை சமாதானப்படுத்த 27 அமாவாசை கழித்து சூடம் ஏற்றுங்கள் வாய்ப்பு கிடைக்கும் என கூறியிருக்கலாம். தேர்தலில் தோற்றதை பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 270 அமாவாசை வந்தாலும் பழனி சாமி ஆட்சிக்கு வர முடியாது.
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களவை, சட்டப் பேரவையில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே பதவியில் இருக்க முடியும். ஒரே நாடு, ஒரே தேர்தலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வைப்பார்களா? பாதியில் பெரும்பான்மை இழந்து விட்டால் யார் ஆட்சி செய்வது, அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.