கோவை அருகே கைது செய்யப் பட்ட மாவோயிஸ்ட் அமைப்பினர் மீதான காவல் வரும் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம், கருமத்தம்பட்டியில் மாவோ யிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ரூபேஸ், சைனா, அனூப், கண் ணன், வீரமணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடக போலீஸாரும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இதில், கருமத்தம்பட்டி வழக் கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்ததால் அவர்களை அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்த ரவு பிறப்பித்தது.
போலி ஆவணங்களைப் பயன் படுத்தி சிம்கார்டு வாங்கியதாக பதிவான வழக்கில் அவர்கள் 5 பேரும் கைதாகி தொடர்ந்து சிறையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கருமத்தம்பட்டி வழக்கு குறித்த விசாரணை கோவை மாவட்ட முதலாவது கூடு தல் அமர்வு நீதிபதி கிறிஸ் டோபர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இதில், மாவோயிஸ்ட் அமைப் பினர் 5 பேரும் ஆஜர்படுத்தப் பட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்களுக்கான காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.