நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் பறக்கும் படையினரின் சோதனையின் போது, அரசியல் கட்சி நிர்வாகிகளை விட்டு விட்டு,சாமானிய மக்களையும், வணிகர் களையும் பாடாய் படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலோ, சட்டப்பேரவைத் தேர்தலோ, உள்ளாட்சித் தேர்தலோ எது வந்தாலும் தமிழகம் திருவிழாக் கோலம் பூணும். தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் 2022 பிப்ரவரி 19 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என தொடர்ச்சியாக தேர்தல் நடைபெற்று கொண்டே இருக்கிறது.
நல்ல ஜனநாயக நடை முறைக்கான அடிவித்து தேர்தல் என்றாலும், தேர்தல் நேரத்தில் பறக்கு படையினர் காட்டும் கெடுபிடி மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.
பறக்கும் படையினரின் கட்டுப் பாடு வணி கர்களை முடக்கி விடு கிறது. “என்னதான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குள் சென்றாலும், சிறு குறு தொழில் நடத்துவோர் ரொக்கத்துடன் சென்று, பொருட்களை வாங்குவதே வழக்கம். தேர்தல் நேரத்தில் இப்படி எடுத்துச்செல்லும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விடுகின்றனர். அதை திரும்ப பெறுவ தற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது” என்கிறார் விருத்தாச லத்தைச் சேர்ந்த வியாபாரிகள் சங்க பொருளாளர் அப்துல் ரஹ்மான்.
தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சில வாரங்கள் குறிப்பிட்ட தொகைஇப்படி முடக்கப்படும் போது எளிய வியாபாரி அதை எதிர்கொள்ள முடியாமல் திக்கித் திணறி தவிப்பதை காண முடிகிறது. அதைச் சமாளிக்க சிலர் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி மாட்டிக் கொள்கின்றனர். ‘கையில் பணம் இருந்த நிலையிலும் ஏன் இந்த அவலம்!’ என்று தவிக்கின்றனர்.
தேர்தல் பறக்கும் படையினரிடம் கேட்டால், “உரிய ஆதாரங்கள், ரசீதுகள் இருந்து பணம் மற்றும் பொருட்களை எடுத்துச் செல் வோரரை நாங்கள் எதுவும் செய் வதில்லை” என்கின்றனர்.
கிராமப் புறங்களில் எளிய மக்கள் பல சிறுசிறு தொழில்களை செய்கின்றனர். இதற்கான பண பரிவர்த்த னையில் அவர்கள் கூறும் நேர்த்தியை அவர்கள் கடைபிடிப்பதில்லை.
ஒரு எளிய வணிகரிடம் விசாரிக்கும் போதே, அது உண்மையான வர்த்தகத்திற்கான பணமா..! அல்லது அதன் பேரில் வாக்காளர்களுக்கு வழங்க எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது தெரிந்து விடும்.
தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சுப முகூர்த்த நாட்களை உள்ளடக்கிய தை மாத முடிவில், மாசி மாத தொடக்கத்தில் நடைபெறுவதால், சுப நிகழ்ச்சி நடத்துவோர், திருமண நிகழ்ச்சிக்கான பொருட்களை வாங்குவதற்கும், நகைகளை வாங்குவதற்கும் ரொக்கத்துடன் செல்கின்றனர். அவர்களும் இந்த தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர்.
திருமணம், பூப்புனித நீராட்டு, காதணி விழா, வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்து வோர், நிகழ்ச்சிக்கு வருவோர் அன்பளிப்பாக வழங்கும் மொய்ப் பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் போது கூட பறக்கும் படையிடம் சிக்கி, பல்வேறு கேள்வி களுக்கு ஆளாக நேரிடுவதாக வருத்தம் தெரி விக்கின்றனர்.
“இந்த தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை எந்த அரசியல் கட்சிக்காரர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்திருக்கிறார்களா? அப்படி செய்திருந்தாலும் அவர்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, தண்டனை ஏதும் தரப்படுகிறதா? அங்கெல்லாம் இவர்கள் தங்கள் கடமைகளை செவ்வனே செய்வ தில்லையே! ஏன் சாமானிய மக்களை மட்டும் வாட்டி வதைக் கின்றனர்.
ஆளும் அரசுகள் இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை உணர்ந்து, அதற்கேற்றவாறு தேர்தலை நடத்த வேண்டும்” என்கின்றனர் அப்பாவி பொது மக்கள்.