திண்டிவனத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசுகிறார். இக்கூட்டத்தில் மேடையில் அமர வைக்கப்பட்ட கே.வி.என்.சாவித்திரி. 
தமிழகம்

திண்டிவனம் நகராட்சியின் அதிமுக நகராட்சித் தலைவர் வேட்பாளர் யார்?

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற் காக அதிமுக, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன.

இந்நிலையில் திண்டிவனம் நகராட்சியில் உள்ள 33 வார்டுக ளுக்கும் அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. திண் டிவனம் நகராட்சியில் தலைவர் பதவி பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுக சார்பில்அனுசுயா சேதுநாதன் தலைவர்பதவிக்கான வேட்பாளர் என ஏற் கெனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் நகர்மன்ற தலை வர் பதவி வேட்பாளர் யார் என்ற கேள்வி அதிமுகவினரால் மட்டுமல்ல மற்ற அரசியல் கட்சியினராலும் கேட்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விழுப்புரம் வடக்குமாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “18வது வார்டில் மாவட்ட பொருளாளரான வெங்க டேசன் மனைவி கே.வி.என்.சாவித்திரி, 20 வது வார்டில் திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன் மனைவி கஸ்தூரி ஆகிய இருவரில் ஒருவர் அதிமுகவின் நகராட்சி தலைவர் வேட்பாளர் என்பது உறுதி.

அதே நேரம் இவர்களில் சாவித்திரியை மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் தேர்வு செய்ய வாய்ப்புண்டு. ஏற்கெனவே, சி.வி.சண்முகம் தன் சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு தகுந்தாற்போல தேர்தலுக்கு முன் பாமகவில் இருந்து அதிமுகவிற்கு வந்த முக்கியஸ்தர்கள் பெரும்பா லோனோருக்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே நகராட்சி தலைவர் பதவியை தன் சமூகத்தைச் சேர்ந்த கஸ்தூரிக்கு பதிலாக வன்னியரல்லாத கே.வி.என் சாவித்திரியை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

இதை கட்சியினர் உணர்ந்து கொள்ளும் வகையில், கடந்த 6-ம்தேதி திண்டிவனத்தில் நடைபெற்றஅதிமுக கூட்டத்தில், கட்சியில்பெரிய பொறுப்பில் இல்லாத,முன்னாள் நகராட்சி துணைத் தலைவராக பதவி வகித்த கே.வி.என் சாவித்திரிக்கு மேடையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT