சிதம்பரத்தில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். 
தமிழகம்

மிரட்டல் தொனிகளை திமுகவினர் கைவிட வேண்டும்: சிதம்பரத்தில் பொன். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

கடலூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பிரச்சா ரம் மேற்கொள்ள நேற்று சிதம்பரம் வந்தார்.

அப்போது அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக புத்துணர்ச்சியோடு களம் காண்கிறது. திமுக இந்த தேர்தலில் மக்களை நம்பி களத்தில் நிற்கிறார்களா? அல்லது ரவுடிகளை நம்பி களத்தில் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியை இங்கு வேட்புமனு தாக்கல் செய்யக்கூட அனுமதிக்கப்படவில்லை. அதையே போராடி நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல ஊர்களில் திமுகவைச் சேர்ந்த வர்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்ததால் அவர்களை திமுகவினர் மிரட்டுகிறார்கள். ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பதை திமுக மனதில் கொள்ள வேண்டும். அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும். மிரட்டல் தொனிகளை திமுகவினர் கைவிட வேண்டும்.

ஆளுநரை அரசியலில் இழுக்க வேண்டாம். சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றினீர்கள்? உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது ஒரு பெண், “நகைக்கடன் தள்ளுபடி செய்கிறோம் என்று கூறினீர்களே என்ன ஆயிற்று?” என கேட்டார். ஆனால் அதை உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்கிறார். “மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னீர்கள்; தரவில்லை” என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். அதையும் கிண்டல் செய்து பேசிக்கொண்டிருக்கிறார்.

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் பிரச்சினை குறித்த கேள்விக்கு, இங்கு திமுக எப்படி அரசியல் செய்கிறதோ அதுபோல் அங்கு சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள். பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க வேண்டிய விஷயம் இது. அதில் ஏதாவது பிரச்சினை என்றால் அரசாங்கம் தலையிட முடியும். அதற்காக அரசு மீது பழி போடக் கூடாது.

விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது அவர்களை மத்திய அமைச்சர்களிடம் அழைத்துச் சென்று பேச வைத் தேன். அப்போது விவசாயிகள் திமுக தூண்டுதலின்பேரில் போராட் டம் செய்வதாக கூறினார்கள். திமுகஅரசியல் ஆதாயம் தேட எதை வேண்டுமானாலும் செய்யும் என்றார்.

பின்னர் அவர் அண்ணாமலை நகர் பேரூராட்சி, கிள்ளை பேரூராட்சி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி,கடலூர் மாநகராட்சி ஆகிய இடங் களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

SCROLL FOR NEXT