உள்ளாட்சியில் நல்லாட்சி மலர திமுக வேட்பாளர்களுக்கு வாக் களித்து வெற்றிபெறச் செய்யுங் கள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட் பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
ராஜபாளையம் சட்டப்பேர வைத் தொகுதி தமிழகமே உற்று நோக்கிய தொகுதி. இந்த தொகுதியில் தற்போதுள்ள எம்எல்ஏ தங்கபாண்டியனை எதிர்த்து போட்டியிட்டவர் யாரென்று உங்களுக்கெல்லாம் தெரியும்.
கடந்த அதிமுக ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டு பலருக்கும் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டு தலைமறைவாக இருந்தவரை கடைசியில் கர்நாடகத்தில் ஒளிந் திருந்தபோது விரட்டிப் பிடித் தோம்.
ராஜபாளையம் பகுதிக்கு தேவையான தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் அனைத்தும் கவுன்சிலர்கள் மூலமே செய்து தரப்படும்.
உள்ளாட்சியில் நல்லாட்சி மலர இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய் யுங்கள். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்களுக்கு உரிமை கிடையாது. கர்நாடகம் நன்றாகத்தான் இருந்தது. அங்கு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டது.
பள்ளிகளில் மதக் கலவரத்தைத் துண்டிவிட்டு ஒற்றுமையாக உள்ள நம்மை பிரிக்கப் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.