மதுரை மாநகராட்சி 34-வது வார்டில் பாஜக வேட்பாளராக சீதா பார்த்தசாரதி போட்டியிடுகிறார். இவர் தினமும் வார்டுக்குட்பட்ட எஸ்எம்பி காலனி, முந்திரித் தோப்பு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், வேட்பாளர் சீதாவை ஆதரித்து நடிகர் செந்தில், மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மருத்துவர் சரவணன் ஆகியோர் நேற்று பிரச்சாரம் செய்தனர். ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகே பிரச்சாரம் செய்தபோது சரவணன் பேசியதாவது:
இந்த வார்டு வேட்பாளர் ஏற்கெனவே பல்வேறு சேவை செய்து வருகிறார். மத்திய அரசின் நிதி உதவி மூலம் இப்பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் மதுரைக்கு முழுமையாகக் கிடைக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.