தமிழகம்

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 65 பேர் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை அரசு போக்கு வரத்து பணிமனை உணவகத்தில் நேற்று மதியம் உணவு சாப்பிட்ட 65 ஊழியர்கள் வாந்தியெடுத்தனர். உணவில் பல்லி கிடந்ததனால் ஏற்பட்ட பாதிப்பு என்று சிறிது நேரத்தில் தெரியவந்தது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 65 தொழிலாளர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இதில், மேல்சிகிச் சைக்காக சங்கர், மணிகண்டன், ரவிச்சந்திரன், சுப்ரமணி ஆகியோர் விழுப்புரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். இதுகுறித்து போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள், உளுந் தூர்பேட்டை கிளை மேலாளர்கள் அண்ணாமலை, நாகராஜன் மற்றும் உணவகப் பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT