தமிழகம்

அதிமுகவில் எளியவர்கள் கூட தலைமை பதவிக்கு வரலாம்: செல்லூர் கே.ராஜூ பேட்டி

செய்திப்பிரிவு

எளியவர்கள் கூட அதிமுகவில் பதவிக்கு வரலாம் என்று முன் னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில்தான் மதுரைக்கு பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்ப ட்டது. மதுரைக்கு மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதி களுக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி நடந்தது. தற்போது திமுக குடும்ப ஆட்சி நடத்துகிறது. திமுகவில் திறமை இருந்தாலும் யாரும் அதிகாரத்துக்கு வர முடி யாது.

அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்துக்கும், கட்சித் தலை மைக்கும் வர முடியும்.

அதிமுகவில் அப்படி இல்லை. எளியவர்கள் கூட முதல்வராகவும், கட்சித் தலைமைக்கும் வரலாம். அந்த அடிப்படையில்தான் கே.பழனிசாமி விவசாயிகளின் முதல்வராகவும், எளியவர்களின் முதல்வராகவும் திகழ்ந்தார். இவ் வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT