தமிழகம்

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவடைந்தது: விடைத்தாள் மதிப்பீடு ஏப்.16-ல் தொடங்குகிறது

செய்திப்பிரிவு

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கடந்த மார்ச் 15-ம் தேதி தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. சமூக அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் பலர் தெரிவித்தனர்.

அனைத்து தேர்வுகளும் முடி வடைந்துவிட்டதால், தேர்வுக்கூடத் தில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். விடுமுறையை ஜாலியாக கழிக்க விரும்புவதாக ஒருசாரார் கூறினர். இன்னும் சிலர், தட்டச்சு பயிற்சி, இசைக்கருவி பயிற்சி உள்ளிட்ட ஏதேனும் ஒரு பயிற்சியில் சேர்ந்து விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

எஸ்எஸ்எல்சி தேர்வு முடி வடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. சென்னையில் 4 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 79 மையங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய் யப்பட இருப்பதாக அரசு தேர்வுத் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT