சென்னை: குமரி கடல் பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
"குமரி கடல் பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக பிப் 14ம் தேதி வரை தமிழகம், புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது,
13ம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 14ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது."
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.