சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, மதிமுக செயலாளர் துரை வைகோ மாவட்ட வாரியாக நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
இது குறித்து மதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
"10ம் தேதியான இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் மதிமுக செயலாளர் துரை வைகோ பங்கேற்கவுள்ளார். 11ம் தேதி திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்களின் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளவுள்ளார்.
அன்றைய தினமே மாலை 4 மணி அளவில் கலிங்கப்பட்டி தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாநகர், நெல்லை புறநகர் மாவட்டங்களின் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளார். 13ம் தேதி அன்று நாகர்கோவில், கன்னியாகுமரி கலந்தாய்விலும், அன்றைய தினமே மாலையில் மதுரை மாநகர், மதுரை புறநகர் வடக்கு, மதுரை புறநகர் தெற்கு மாவட்டங்களின் கலந்தாய்விலும் பங்கேற்கவுள்ளார்
14ம் தேதி காலை ராமநாதபுரம் மாவட்ட கலந்தாய்விலும், மாலை திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களின் கலந்தாய்விலும் பங்கேற்கவுள்ளார். 15ம் தேதி காலை திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் மாவட்டங்களின் கலந்தாய்விலும், மாலையில் கோவை மாநகர், கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு மாவட்டங்களின் கலந்தாய்விலும் பங்கேற்க இருக்கிறார்."
இவ்வாறு மதிமுக தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது,