தமிழகம்

திமுக வரைவு தேர்தல் அறிக்கை: கருணாநிதியிடம் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி எம்.பி., பேராசிரியர் அ.ராமசாமி, ஆர்.சண்முகசுந்தரம், சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, என்.ஆர்.இளங்கோ, டி.கே.எஸ்.இளங்கோவன், தங்கம் தென்னரசு ஆகிய 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கட்சியினர் மற்றும் பல்வேறு துறையினரிடம் கருத்துகளைக் கேட்டு தேர்தல் அறிக்கையை இறுதி செய்துள்ளனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ விடியல் மீட்புப் பயணத்தின்போது அவரிடம் வழங்கப்பட்ட மனுக்களில் உள்ள அம்சங்களும் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. வரைவு தேர்தல் அறிக்கையை டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் நேற்று மாலை கருணாநிதியிடம் வழங்கினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, ‘‘வரைவு தேர்தல் அறிக்கையை கருணாநிதியிடம் வழங்கியுள்ளோம். பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் ஆலோ சித்து தேர்தல் அறிக்கையை அவர் இறுதி செய்வார். விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்’’ என்றார்.

          
SCROLL FOR NEXT