தமிழகம்

ஆம் ஆத்மி நிர்வாகிகளுடன் வைகோ சந்திப்பு: ம.ந.கூட்டணியில் இணைக்க 3 மணி நேரம் பேச்சு

செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து மதிமுக பொதுச் செய லாளர் வைகோ சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத் தினார். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் ஆம் ஆத்மி இணையும் என்று அவர் நம் பிக்கை தெரிவித்தார்.

ஆம் ஆத்மி மாநில நிர்வாகி களை நேற்று சந்தித்த வைகோ, அக்கட்சியை தங்கள் கூட்டணியில் இணைய வலி யுறுத்தினார். காலை 10 முதல் பகல் 12.50 மணி வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பின் னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:

இந்தத் தேர்தலில் ஊழல்தான் பிரதான பிரச்சினையாக உள்ளது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி இணைந்துள்ளது. எங்கள் அணி யில் ஆம் ஆத்மி கட்சியும் இணைய வேண்டும் என்று கருதி, அக்கட்சியின் மாநில நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னோம். அவர்கள் தங்களின் மேலிடத்துடன் பேசிவிட்டு பதில் சொல்வதாக கூறினர். ஆம் ஆத்மி மக்கள் நலக் கூட் டணியில் இணையும் என்று நம்புகிறேன்.

அதிமுகவுக்கு திமுகதான் மாற்று என்று கருணாநிதி கூறியது உண்மைதான். ஏனென்றால், ஊழல் செய்வதில் அதிமுகவுக்கு மாற்று திமுக. கார்களில் கட்சிக் கொடி கட்டக்கூடாது என்று தேர்தல் ஆணையம் சொல்கி றது. இன்னும் போனால், கரை வேட்டியே கட்டாதீர்கள் என்று கூட சொல்வார்கள். எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.

அதிமுகவை வெற்றி பெற வைக்கவே நாங்கள் செயல் படுகிறோம் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர்தான் அந்த அறிக் கையை எழுதினாரா என்று தெரிய வில்லை. அப்படி அவர் எழுதி யிருந்தால், அதை நினைத்து வருத்தப்படுகிறேன். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆம் ஆத்மி மாநில ஒருங் கிணைப்பாளர் வசீகரன் கூறும் போது, ‘‘மக்கள் நலக் கூட்டணி யில் இணைவது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. கட்சி மேலிடத்துடன் ஆலோசித்து விட்டு முடிவை அறிவிப்போம். தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். எங்கள் கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரச்சாரத்துக்கு வருவார்’’ என்றார்.

இதற்கிடையே, மக்கள் நலக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சியில் ஒரு பிரிவினர் கட்சி அலுவலகம் எதிரே கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

SCROLL FOR NEXT