கோவை மாநகராட்சி 38-வது வார்டில் அதிமுக வேட்பாளராக டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் போட்டியிடுகிறார். இவர், ஓணாப்பாளையம், கல்வீரம்பாளையம், பொம்மனாம்பாளையம் பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம்செய்தார்.
அப்போது, பொதுமக்கள் பல்வேறுகுறைகளை அவரிடம் தெரிவித்தனர்.பழுதடைந்த பள்ளிக் கட்டிடத்தை பார்வையிட்ட அவர், தான் வெற்றி பெற்றபின் கான்கிரீட் கட்டிடம் கட்டித் தருவதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து, ஷர்மிளா சந்திரசேகர் கூறும்போது,‘‘ இந்தப் பகுதியில் அதிமுக ஆட்சிக் காலத்தின்போது நூலகம்மற்றும் பூங்கா அமைத்து தரப்பட்டது. நூலகத்துக்கு தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கு உதவிகள் செய்யப்பட்டன. நூலகம் அமைக்கப்பட்ட பின்னர் மாணவர்கள், இளைஞர்களிடம் படிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த ஏரியாவுக்கு என்ன தேவை, அடிப்படை வசதிகள் என்ன செய்து தரவேண்டும் என மக்களிடம் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமின்றி மோசமாக இருந்தன. இதை வாங்கிப் பார்த்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் திமுக அரசு மீது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆனால், இதைப்பற்றி எல்லாம்கண்டுகொள்ளாமல் அவர்கள் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்கள். மக்கள் இவர்களுக்கு தக்க பதில் தருவார்கள்” என்றார்.
ஷர்மிளா சந்திரசேகர் வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு சென்றபோது மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பிரச்சாரத்தின்போது கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் உடனிருந்தார்.