தமிழகம்

வடநெம்மேலி பண்ணையிலிருந்து 1000 முதலைகள்: குஜராத் உயிரியல் பூங்காவுக்கு இடமாற்றம்

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி கிராமத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி முதலைப் பண்ணை அமைந்துள்ளது. இதில், பல்வேறு இனங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலைகள் இயற்கையான வசிப்பிட முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் முதலைப் பண்ணை மூடப்பட்டது. இதனால், முதலைகளைப் பராமரிக்க முடியாமல் நிர்வாகத்தின் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, முதலைகளைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்காக இடமாற்றம் செய்ய வேண்டும் என வன விலங்கு சட்டத்தின் மூலம் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு முதலைப் பண்ணை நிர்வாகத்தினர் விண்ணப்பித்தனர்.

இதன்பேரில், குஜராத் மாநிலத்தில் உள்ள பூங்காவுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முதலைகளை இடமாற்றம் செய்ய மேற்கண்ட ஆணையம் அனுமதியளித்தது. இதையடுத்து, லாரிகள் மூலம் 1000 முதலைகள் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT