தமிழகம்

தொகுதி கொடுக்காததால் அதிமுகவில் இணைய திட்டம்? - திமுகவில் இருந்து விரட்டப்படுகிறேன்: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

அ.வேலுச்சாமி

திமுகவிலிருந்து விரட்டப்படுகி றேன், தள்ளப்படுகிறேன் என திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் தெரி வித்துள்ளார்.

திருச்சி மாவட்ட திமுகவில் கே.என்.நேருவுக்கு போட்டியாக அரசியல் செய்து வருபவர் என்.செல்வராஜ். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு மண்ணச்சநல்லூர் தொகு தியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி விருப்ப மனு அளித் திருந்தார். ஆனால், அந்த தொகு திக்கு நேருவின் ஆதரவாள ரான கணேசன் அறிவிக்கப் பட்டார். இது செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யது. வேட்பாளரை மாற்ற வலி யுறுத்தி முசிறி, மண்ணச்சநல் லூர், அய்யம்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் செல்வராஜ் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே, சென்னையில் கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து செல்வராஜ் முறையிட்டுள்ளார். ஆனால், அவருக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, அதி முகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜிவிடம் கேட்டபோது, ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: அரசியலில் என்னைப் புறந்தள்ள வேண்டும், அவமானப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு கே.என்.நேரு செயல்பட்டு வருகிறார். அவர் அளித்த தகவல்களை நம்பி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் என் மீது வெறுப்பை உமிழ்கிறார்.

மண்ணச்சநல்லூர் தொகுதி வழங்கப்படாதது குறித்து கடந்த 14-ம் தேதி ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட்டேன். அப்போது, 2019-ல் நடைபெறும் எம்பி தேர்தலில் பார்த்துக் கொள் ளலாம் என பதிலளித்தார். அதே போல அரசியலிலும் நான் தொடர விரும்புகிறேன். என்ன முடிவு எடுப்பது எனத் தெரியாமல் குழப் பத்தில் உள்ளேன். ஆனாலும், முடிவெடுத்தே ஆக வேண்டிய நேரம் இது.

திமுகவிலிருந்து நான் தள்ளப் படுகிறேன், விரட்டப்படுகிறேன். எங்கும் செல்ல நானாக விரும்ப வில்லை. அதிமுகவில் சேரு வேனா என்பது குறித்து இப் போது தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் நேற்று திருச்சிக்கு வந்திருந்த மு.க.ஸ்டாலினை சந்திக்காததோடு பிரச்சாரத்திலும் பங்கேற்கவில்லை.

SCROLL FOR NEXT