திருச்சி உறையூர் குறத்தெருவில் நேற்று திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின்.படம்: ஜி.ஞானவேல்முருகன் 
தமிழகம்

தொடர் சட்டப் போராட்டமே நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம்: தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தகவல்

செய்திப்பிரிவு

தொடர் சட்டப் போராட்டம் நடத்து வதே நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தெரிவித்தார்.

கரூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டா லின் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி ஒரு வாரத்துக்குள் மீண்டும் மசோ தாவை நிறைவேற்றி அனுப்பி யிருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் உதயநிதிக்கு தெரியும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். அந்த ரகசியத்தை இங்கு சொல்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயவே மாட்டோம். தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவோம். அதிமுக, பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார் என்றார்.

இப்பிரச்சாரத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாநக ராட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 48 பேரும் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, வேலாயுதம்பாளை யம், கிருஷ்ணராயபுரம், குளித் தலை ஆகிய இடங்களில் உதய நிதி பிரச்சாரம் செய்தார்.

பின்னர், திருச்சி மாநகராட்சி, மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மண்ணச்சநல்லூர், உறையூர் குறத்தெரு, மரக்கடை, காட்டூர், துவாக்குடி ஆகிய இடங்களில் உதயநிதி ஸ்டாலின் பேசியது:

சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதி கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களைப் போல நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திருச்சி மாவட்டத்தில் 100 சதவீத வெற்றி யைப் பெற வேண்டும். திருச்சி மாவட்டம் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்றார்.

இப்பிரச்சாரத்தில் அமைச்சர் கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைர மணி, வடக்கு மாவட்டச் செய லாளர் காடுவெட்டி ந.தியாகரா ஜன் எம்எல்ஏ, மாநகரச் செயலா ளர் மு.அன்பழகன் மற்றும் திமுக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் கள், நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

SCROLL FOR NEXT