தமிழகம்

புதுச்சேரியில் மே 5-ம் தேதி சோனியா பிரச்சாரம்

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் மே 5-ம் தேதி சோனியாகாந்தியும், மே 2-ல் காரைக்காலில் ராகுல் காந்தியும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியது:

காங்கிரஸ் - திமுக வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் செய் வதற்காக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி மே 5-ம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார். அதே போல் துணைத் தலைவர் ராகுல் காந்தி காரைக்காலுக்கு மே 2-ம் தேதி பிரச்சாரம் செய்ய வருகிறார். அவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஏற்கெனவே புதுச்சேரி வந்ததால் தற்போது காரைக்காலுக்கு சென்று பிரச்சாரம் செய்கிறார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலம் பெற்று வருகிறது. ஆளுங்கட்சி உட்பட பலகட்சியினர் காங்கிரஸில் இணைகின்றனர். வரும் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT