தமிழகம்

'இவ்வளவு பில்டப் வேண்டாம்' - நயினார் நாகேந்திரனுக்கு நகைச்சுவையாக பதிலளித்த சபாநாயகர் அப்பாவு

செய்திப்பிரிவு

சென்னை: "சட்டப்பேரவை இருந்து வெளியேறுவதற்கு இவ்வளவு பில்டப் வேண்டாம்" என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாக பதிலளித்தார்.

நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. முதலில் சட்டப்பேரவை சபாநாயகர், ஆளுநரின் கடிதத்தை விளக்கி உரையாற்றினார். பின்னர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து உரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.

இதில் மற்றொரு கட்சி உறுப்பினர் பேசியபோது பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு, ”நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை ஆளுநர் அவமானப்படுத்தவில்லை“ என்று பேச ஆரம்பித்தார். இதனை கவனித்த சபாநாயகர் அப்பாவு, "சட்டப் பேரவையிலிருந்து இருந்து வெளியேறுவதற்கு இவ்வளவு பில்டப் வேண்டாம்; வெளியே போக நினைத்தால் போய்விடுங்கள்" என்று அறிவுறுத்தினார்.

இறுதியாக முதல்வர் ஸ்டாலின் நீட் மசோதா தொடர்பாக உரையாற்றினார். முதல்வரின் உரைக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அத்துடன், அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT