கோப்புப் படம் 
தமிழகம்

விதிமுறைகள் மீறல்: கடம்பூர் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்து

செய்திப்பிரிவு

சென்னை: தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT