செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் திமுக முன்னாள் கவுன்சிலர் சுயேச்சையாக போட்டியிடுவதால் உதயசூரியன் சின்னத்தில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார்.
செங்கை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 2 இடங்களும்,கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓர் இடமும்,விடுதலை சிறுத்தைக்கு 2 இடமும்ஒதுக்கப்பட்டு மற்ற இடங்களில்திமுக களம் காண்கிறது. இதில்காங்கிரஸ் கட்சிக்கு 20, 24-வது வார்டுகள் ஒதுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து 20-வதுவார்டில், காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு நகரத் தலைவராக உள்ளபாஸ்கருக்கு சீட் ஒதுக்கப்பட்டது.இதில் இவரது மனைவி தேவகிபாஸ்கர் போட்டியிடுகிறார். ஏற்கெனவே இந்த வார்டில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் யுவனேசன் தன்னுடைய மனைவிமாலதிக்கு சீட் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே யுவனேசன் சீட்கிடைக்காததால் இவரது மனைவி பெயரில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் தனக்கு வெற்றி வாய்ப்பு இருக்காதுஎன்பதால் காங்கிரஸ் வேட்பாளர் தேவகி பாஸ்கர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து திமுக, காங்கிரஸ் கட்சியின் ஒப்புதலையும் பெற்று திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இது குறித்து தேவகி பாஸ்கர் கூறியதாவது: திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸுக்கு 2 சீட்ஒதுக்கீடு செய்யப்பட்டது. காங்கிரஸ் சார்பில் 20-வது வார்டில் நான் போட்டியிடுகிறேன். ஏற்கெனவேஅந்த வார்டில் திமுக கவுன்சிலராக இருந்த யுவனேசன் அவரது மனைவி பெயரில் சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவை வாபஸ் பெறும்படி அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் கட்சியினர் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அவர் ஏற்கவில்லை.
இதனால் கை சின்னத்தில்போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புஇருக்காது என்பதால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்துஉதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்றார்.