இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைப்பயணத்தை விளக்கும் ‘குறையொன்றுமில்லை’ வாழ்க்கைத் தொடர் பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் ஒளிபரப்பாகி வருகிறது. ‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
கடந்த 29 வாரங்களாக பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ தொகுப்புகள் இந்த தொடரில் இடம் பெறுகின்றன.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 10 வது வயதில், அவரது முதல் இசைத் தட்டு பதிவானது, சிறுவயதில் அவர் செய்த கச்சேரி கள், ‘சேவாசதனம்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனது, சதாசிவம் அவர்களின் அறிமுகம், இருவருக்கும் திருநீர் மலையில் திருமணம் நடந்தது என்று பல சம்பவங்கள் இந்த தொடரில் இதுவரை இடம்பெற்று ரசிகர்களை ஈர்த்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக விருக்கும் நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை பயணத்தில் ஒரு மைல் கல்லாக வும், திருப்புமுனையாக அமைந்த ‘மீரா’ படத்தின் சில காட்சிகளும், இப்படத்தில் மகாராணாவாகவே வாழ்ந்த பிரபல நடிகர் சித்தூர் வி.நாகைய்யாவை பற்றிய சிறு தொகுப்பும், பாடல்களும் ஒளிபரப் பாக உள்ளன. இதன் மறுஒளி பரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்.