தமிழகம்

விழுப்புரத்தில் நாளை ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டி

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் விழா 19-ம் தேதி நடக்கி றது. அன்று இரவு திருநங்கைகள் தாலி கட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டமும், திருநங்கைகள் தாலி அகற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

திருநங்கைகள் கலைநிகழ்ச்சி கள் குறித்து, திருநங்கைகள் கூட் டமைப்பைச் சேர்ந்த விழுப்புரம் அரவாணிகள் சங்கத்தைச் சேர்ந்த் ராதாம்மாள், சென்னை அருணா, சுதா, ரூபி, சேலம் விமலா உள்ளிட் டோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கூவாகம் சித்திரைத் திருவிழா வுக்கு, பல்வேறு நாடுகள், மாநிலங் களில் இருந்து திருநங்கைகள் வருகை தருகின்றனர். திருநங்கை களின் திறனை சமூகத்துக்கு வெளிப்படுத்தும் விதமாக விழுப் புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை விழுப்புரம் நகராட்சி மைதானத் தில் மாலை கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தொடர்ந்து நாளை (திங்கள் கிழமை) மாலை 6 மணியளவில் ‘மிஸ் கூவாகம்’ திருநங்கைகள் அழகிப் போட்டி நடக்கிறது. ஏராள மான திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.

திருநங்கைகளின் சமுதாயத் தலைவர்கள், தொண்டு நிறுவ னங்கள், தமிழ்நாடு அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் இணைந்து இந்த கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

SCROLL FOR NEXT