அதிகாரிகள் நேரில் பேச்சுவார்தைநடத்தியதால் தம்பிக்குநல்லான் பட்டினம் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்றனர்.
புவனகிரி அருகே உள்ள தம்பிக்குநல்லான்பட்டினம் கிராமத்தின் ஒரு பகுதி ஆயிபுரம் ஊராட்சியிலும், ஒருபகுதி ஆதிவராகநல்லூர் ஊராட்சியிலும்,ஒருபகுதி புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் வருகிறது. இதனால் கிராமத்துக்கு முழுமையான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. இந்த கிராமத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு பல முறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் புவனகிரி பேரூராட்சி 4- வது வார்டில் வரும் இக்கிராமத்தின் ஒரு பகுதி மக்கள் தேர்லை புறக்கணிக்கப்போவதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிராமத்தின் முகப்பு பகுதியில் பேனர் வைத்த னர்.
இந்த நிலையில் நேற்று புவனகிரி வட்டாட்சியர் அன்பழகன்மற்றும் அதிகாரிகள் நம்பிக்குநல் லான்பட்டினம் கிராமத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனைய டுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி செல்போனில் பொதுமக்களிடம் பேசினார். படிப்படியாக அனைத்து அடைப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேனரை அகற்றினர். மேலும் புவனகிரி பேரூராட்சி 4 வது வார்டு தேர்தல்புறக்கணிப்பை வாபஸ் பெற்றதா கவும் தெரிவித்தனர்.