திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர், வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என மொத்தம் 486 வார்டுகளுக்கான கவுன் சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி யில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், 3 வார்டுகளில் சுயேச்சையாக களமி றங்கி உள்ளனர். இது திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
திண்டுக்கல் 3- வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இந்திராணி வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் காலில் விழுந்து வணங்கி ஆதரவு திரட்டி வருகிறார். பிரச்சாரத்துக்கு முக்கியத் தலைவர்கள், உள்ளூர் நிர்வாகிகள் என யாரையும் எதிர்பார்க்காமல் அந்தந்த வேட்பாளர்கள் வார்டுக்குள் உள்ள தங்கள் கட்சியினரை அழைத்துக் கொண்டு வாக்கு சேகரிக்கின்றனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்ற தலைப்பில், திண்டுக்கல் மாவட்ட வாக்காளர்களிடம் பிப். 13-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் பிரச்சாரம் செய்ய உள்ளார்.