தமிழகம்

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரியில் 9,723 பேர் இடங்களை தேர்வு செய்தனர்

செய்திப்பிரிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் நடந்து வரும் பொது பிரிவு கலந்தாய்வில் 9,723 பேர் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல் நாளில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேரும், 28-ம் தேதி நடந்த இரண்டாவது நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 541 பேரும் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையை பெற்றனர்.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வுக்கு ஜனவரி 30-ம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 1-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை 9,951 பேர் ஆன்லைனில் பதிவு செய்தனர்.

கல்லூரிகளில் இடங்களைதேர்வு செய்வது இணையதளங்களில் கடந்த 2-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நேற்றுமாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 9,723 பேர் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

வரும் 7-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. 16-ம் தேதி கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 17-ம் தேதி முதல் 22-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண் டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT