தமிழகம்

போலீஸைப் பார்த்து மாடியில் இருந்து குதித்த அதிமுக நிர்வாகி கால் முறிவு

செய்திப்பிரிவு

அதிமுக சார்பில் போட்டியிட்டு ஜெயித்த பிறகு கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன் என்று மிரட்டிய சாத்தூர் அதிமுக நிர்வாகி போலீஸ் விசாரணைக்கு பயந்து மாடியில் இருந்து குதித்ததில் அவரது கால் முறிந்தது.

சாத்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் சாத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலர் சண்முகக்கனி பேசும்போது, “அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்துவிட்டு, எந்தக் கவுன்சிலராவது கட்சி மாறினால் அவனை வீடு தேடி வந்து வெட்டுவேன்” எனப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து சாத்தூர் நகர்போலீஸார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர். சண்முகக்கனியிடம் விசாரிப்பதற்காக அவரது வீட்டுக்குப் போலீஸார் நேற்று முன்தினம் சென்றனர். அப்போது, போலீஸார் கைது செய்ய வருவதாக நினைத்துவீட்டின் மாடியில் இருந்து சண்முகக்கனி கீழே குதித்தார். இதில்அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதையொட்டி, கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT