தமிழகம்

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சாட்டை துரைமுருகன் மனு

செய்திப்பிரிவு

ஓரகடத்தில் உள்ள பாக்ஸ்கான் ஆலை பணியாளர்கள் தரமற்ற உணவை உட்கொண்டதால் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.

அவதூறு பரப்பியதாக திருச்சி சாட்டை துரைமுருகனை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிஉயர் நீதிமன்றத்தில் சாட்டை துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் போலீஸார் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT